Tuesday 25 June 2013

Kannadasan

நாம் பேச நினைப்பதெல்லம் தான் பேசிய கவிஞன் கண்ணதாசன்.

இதோ சில முத்துக்கள்.


"கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
ஆலயமணி படத்தில்
 
நான்கே வார்த்தைகளில் அழகான கவிதைக்கு எடுத்துக்காட்டு.
....
மாட்டுக்கார வேலன் படத்தில் இரட்டை வேட கதாநாயகனிடம் கதாநாயகிக்கு உண்டாகும் குழப்பத்தை அழகாகச் சொல்லும்
"ஒரு பக்கம் பார்க்கிறா"....
.....
பாலும் பழமும் படத்தில் ஒரு அருமையான கவிதை.
"காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா"
சில நாட்கள் கணவனைப் பிரிந்திருந்து பின் மீண்டும் சந்திக்கப் போகும் மனைவியின் மன நிலை.
...
பிரிவின் துயர்
"உண்ண வென்று உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கம் என்று படுக்கை போட்டால் ஓடி வந்து எழுப்புகிறாய்"
...
மரணத்தின் முன்னே கையாலாகாமல் நிற்கும் டாக்டர் கணவனின் துயரம்....
"எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?"...
சுய நம்பிக்கையின் வெளிப்பாடாக ஒரு அருமையான பாடல்..
"உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக"
சொல்லிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு நிறுத்துகிறேன்.

No comments:

Post a Comment