Sunday, 13 July 2014

அம்மாக்களும் குழந்தைகளும்



அம்மா-1.  எதை எடுக்கக் கூடாதோ அதைத் தான் எடுப்பாள்.
                 வாயில் வைக்காதே என்றால் கேட்க மாட்டாள்.

அம்மா-2.  ஒயரைப் பிடித்து இழுப்பான்.
              செருப்பை வாயில் வைப்பான்.

 அம்மா-1.  ஆனால் ஆகாரம் கொடுத்தால் வாயே திறக்க 
          மாட்டாள்.  மீறித்  திணித்தால் துப்புவாள்.  

அம்மா-2  மேஜை மேல் ஒரு சாமான் வைக்க முடியாது.
              இழுத்துப் போட்டு விடுவான்.

அம்மா-1.  எது செய்யக் கூடாதோ தைச்  செய்து  விட்டு
                       நம்மைப்  பார்த்து  ஒரு சிரிப்பு. கோபிக்கவும் மனம் வராது.

அம்மா-2.  இவனிடமும் அதே கதை தான். வயிற்றில் இருக்கும் போதே டிரைனிங் எடுத்துக்
                      கொண்டு வருவார்களோ என்னவோ.


குழந்தை--1. எதைத் தொட்டாலும் இதைத் தொடாதே அதை எடுக்காதே, வாயில் வைக்காதே                         என்பாள் அம்மா
குழந்தை--2. ஒயரை இழுக்காதே, செருப்பைக் கடிக்காதே இது அப்பா.
குழந்தை--1. கஷ்டப் பட்டு எம்பி கால் விரல்களால் நின்று கொண்டு கை நீட்டி  மேஜை மேல்                       இருக்கும் அப்பாவின் மொபைலை எடுத்து விட்டோம் என்று வெற்றிச் சிரிப்பு                          சிரிக்கும் போது எங்கிருந்தோ ஓடி வந்து அதைப் பிடுங்கி விடுவார் அப்பா.
குழந்தை--2. அவர்கள் சாப்பிடு சாப்பிடு என்று வாயில் திணிக்கிற ஆகாரத்தில் டேஸ்டே
              இருக்காது.
குழந்தை--1. பெரியவர்கள் எல்லோருமே இப்படித்தான். நாம் வயிற்றில் இருக்கும் போதே                    ட்ரைனிங் எடுக்கத் தொடங்கி விடுவார்கள் போல.

No comments:

Post a Comment