காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
சிந்திய வேர்வை நிலத்தில் விழுந்து
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
நிறைஞ்சிருக்குது பூமியிலே
அதைப் பாத்து நாமும் காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
எத்தனை அருமையான பாடல். நினைக்க நினைக்க வியக்க வைக்கும். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் பூமித் தாயே நிறைவேற்றுவதை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் கவிஞர்.
கனியும் நெல்லும் தந்து நமது பசியாற்றி பருத்தி தந்து மானம் காக்கிறது. இவை நமது தொடர் தேவை (recurring needs) என்பதனால் கறுகிய காலத்தில் விளைந்து கிடைக்கின்றன.
அடுத்த தேவை உறைவிடம். பூமியில் ஓடும் நதிகளின் கரையில் நமது உழைப்பால் வீடுகள் கட்டி நகரங்களாக்கி நிறைவுடன் வாழத் தொடங்கலாம். உலகின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரைகளில் தானே தோன்றின, வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் தஞ்சை, சிந்து சமவெளி நாகரிகம், நைல்நதிக் கரையில் எகிப்திய நாகரிகம் என.
மனிதனின் தேவை அடங்குமா? எதிர்காலத்துக்கு, அடுத்த தலைமுறைக்கென எதுவும் சேர்த்து வைக்க வேண்டாமா?
தேக்கு மூங்கில் பாக்கு சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்தால் முதலில் கொஞ்சம் பாடுபட்டால் போதும் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து பலவருடங்கள் பலன் தரும். கடனும் உடனும் தேவையில்லை சேமிக்கவும் முடியும்.
இதற்கான வசதியும் பூமித் தாய் செய்து தருகிறாள்.
ஆஹா மனிதர்களின் நியாயமான தேவைகளை வரிசைப் படுத்தி அதை பூமாதா நிறைவேற்றும் அழகையும் வரிசைப் படுத்தி இருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய அர்த்தங்கள் புரியும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்ற அழகிய குறளுக்கு அருமையான விளக்கம் இந்தப் பாடல் என்றே சொல்லலாம்.